சுந்தரா டிராவல்ஸ் 2-ம் பாகத்தில் கருணாஸ்!

By KU BUREAU

முரளி, வடிவேலு நடித்து 2002-ல் வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதில் முரளி, வடிவேலு, வினு சக்கரவர்த்தியின் காமெடி ரசிக்கப்பட்டது.

தற்போது அந்தப் படத்தின் 2-ம் பாகம், ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்ற தலைப்பில் உருவாகிறது. கருணாஸ், கருணாகரன் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மேலும் ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர் என பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இதில் நடிகராக அறிமுகமாகிறார். இளம் ஜோடிகளாக விக்னேஷ் - அஞ்சலி அறிமுகமாகிறார்கள். செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஹரிஹரன் இசை அமைக்கிறார். கறுப்பு தங்கம் இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “இந்த கதையிலும் பஸ்தான் ஹீரோ. அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம். ஒரு பஸ்சை சொந்தமாக வாங்கி, அதைப் படத்துக்கு ஏற்றார் போல மாற்றிப் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE