‘புஷ்பா 2’ மொத்த வசூல் எவ்வளவு?

By KU BUREAU

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கிய இந்த அதிரடி ஆக்‌ஷன் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் சாதனை படைத்து வந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் மொத்த வசூலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ‘புஷ்பா 2’ உலக அளவில் ரூ.1871 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதிக வசூல் சாதனை செய்த இந்திய படங்களின் வரிசையில் 2-வது இடத்தை ‘புஷ்பா 2’ பெற்றுள்ளது.

இந்தியாவில் அதிக வசூல் செய்த 5 படங்களின் பட்டியலில் ‘தங்கல்’ முதலிடத்தில் இருக்கிறது. அந்தப் படம் ரூ. 2024 கோடி வசூலித்தது. இரண்டாவது இடத்தில் ‘புஷ்பா 2’ இருக்கிறது. ‘பாகுபலி 2’ ரூ. 1742 கோடி வசூலித்து 3-வது இடத்திலும் ‘ஆர்ஆர்ஆர்’ (ரூ.1251 கோடி), ‘கேஜிஎஃப் 2’ (ரூ. 1176 கோடி) ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE