கார் விபத்தில் சிக்கினேனா? - நடிகர் யோகி பாபு விளக்கம்

By KU BUREAU

நடிகர் யோகிபாபு இப்போது ‘அக்​யூஸ்ட்’ என்ற படத்​தில் நடித்து வருகிறார். இதன் படப்​பிடிப்பு ஏலகிரி​யில் நடந்து வந்தது. படப்​பிடிப்பை முடித்து​விட்டு சென்னைக்கு நேற்று அதிகாலை திரும்​பினார். வாலாஜாபேட்டை அருகே யோகிபாபு வந்த கார் விபத்​தில் சிக்​கிய​தாக​வும் அவர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளி​யா​யின.

இந்நிலை​யில் அதை மறுத்​துள்ள யோகிபாபு, “எனக்கு எந்த விபத்​தும் ஏற்பட​வில்லை, நான் நலமாக இருக்​கிறேன். தற்போது ஒரு படத்​தின் படப்​பிடிப்​பில் இருக்​கிறேன். படப்​பிடிப்​புக்காக வந்திருந்த ஒரு கார், விபத்தில் சிக்​கியது. அதில் நான் பயணிக்க​வில்லை” என்று தெரி​வித்​துள்ளார்.

நடிகர் உதயா​வும் இதை மறுத்​துள்ளார். அவர் கூறும்​போது, “நான், யோகிபாபு, அஜ்மல் ஆகியோர் ஒரே காரில்​தான் வந்தோம். படப்​பிடிக்காக வந்த மற்றொரு கார்​தான் விபத்​தில் சிக்​கியது. யோகிபாபுவுக்கு எந்த காயமும் ஏற்பட​வில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE