சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் படத்துக்கு 'ஹார்ட்டின்' என்று தலைப்பு வைத்துள்ளனர். ரொமான்டிக் காமெடி படமான இதை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முகேஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.
படம் பற்றி கிஷோர் குமார் பேசும்போது, “இது நகைச்சுவை கலந்த காதல் கதை. 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.