‘கனா’, ‘தும்பா’ படங்களில் நடித்த தர்ஷன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம், ‘ஹவுஸ் மேட்ஸ்’. காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார்.
பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரிக்கிறார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். ஃபேன்டஸி, ஹாரர் காமெடி படமான இதன் கதை, ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பைச் சுற்றி நடக்கிறது. கோடையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.