பழைய படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடும் போக்கு கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. ரஜினியின் 'முத்து', விஜய்யின் 'கில்லி', தனுஷின் ‘3', கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ என பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் அள்ளின. இதில் ‘கில்லி’ ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் விஜய்யின் ‘சச்சின்’ படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2005-ம் ஆண்டு வெளியான இதில் ஜெனிலியா, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி, கோடையில் ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.