சென்னையில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவில், அவரது இரு பாடல்களுக்கு ரஷ்ய நாட்டு கலைஞர்கள் நடனமாடி நெகிழவைத்தனர்.
இளையராஜா இசையில் ‘மீரா’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ பட்டர்ஃப்ளை’, ‘சொல்லத் துடிக்குது மனசு’ படத்தில் இடம்பெற்ற ‘பூவே செம்பூவே’ ஆகிய பாடல்களுக்கு ரஷ்ய நாட்டு கலைஞர்கள் ஆடிய நடனம் அற்புதமாக இருந்தது.
இதனை நெகிழ்ச்சியுடன் இளையராஜா பகிர்ந்துள்ள சோஷியல் மீடியா போஸ்டும் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
அந்த ரஷ்யக் கலைஞர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, “ரஷ்யாவில் இருந்து வந்து எனது ஸ்டூடியோவில் சிறப்பான நிகழ்ச்சியை நிகழ்த்திய நடனக் கலைஞர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். அவர்களின் நடனம் நளினமாக, உணர்வுபூர்வமானதாக, இதயத்தை தொடுவதாக, குற்றம் குறை ஏதுமின்றி வசீகரிக்கக் கூடியதாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
» நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசுக்கு தாரை வார்ப்பதா? - தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப். 03, 2025
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய நடனக் குழுவை இளையராஜா ஸ்டூடியோவில் நடனம் ஆட ஏற்பாடு செய்தவர், இந்திய - ரஷ்ய கலாச்சார மையத்தின் பொதுச் செயலாளர் பி.தங்கப்பன். இளையராஜா பாடலுக்கு மேற்கத்திய பாணியில் அந்தக் குழு நடனமாடியது.
“இளையராஜா இசையில் நிறைந்துள்ள மெல்லிசையின் மேன்மையால் ஈர்க்கப்பட்டோம். அவரது இசையில் அமைந்த பாடல்களுக்கு நடனமாடியதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார் ரஷ்ய நடனக் குழுவின் தலைவர் கலீனா.
Loading...