விஜய் நடித்து வரும் 'விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இந்தப் போஸ்டரை விஜய் வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் மாஸ் ஆக உள்ளது போஸ்டரும் தலைப்பும்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுனர். இப்படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் படப்பிடிப்புகளுக்கு இடையே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலம். அந்தப் புகைப்படப் பாணியில் ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது.
» நடிகர் கஞ்சா கருப்பு Vs வீட்டு ஓனர் - இரு தரப்பு புகார் என்ன?
» அஜித் முதல் அஸ்வின் வரை: பத்ம விருதுகள் பெறும் தமிழகத்தைச் சேர்ந்தோர் பட்டியல்
கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
தேர்தல் அரசியலில் ஈடுபடும் முன்பு நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ‘ஜன நாயகன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதற்கு ஏற்றபடி படத் தலைப்பும், போஸ்டருமே அரசியல் பேசுகிறது.