'டிடி நெக்ஸ்ட் லெவல்’: சந்தானம் படத்தில் முதல் பார்வை வெளியீடு!

By KU BUREAU

நடிகர் சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை அவரின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது.

சந்தானம் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தானத்துடன் நடிகர்கள் கெளதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், 'டிடி நெக்ஸ்ட் லெவெல்' திரைப்படத்தையும் இயக்குகிறார். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், "'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரு வருடமாக தொடர்ந்து செய்து முடித்தோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் செட் அமைத்தோம்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE