பிக்பாஸ்8 டைட்டில் பரிசுத்தொகையில் செய்ய இருப்பது இதுதான் - முத்துக்குமரன்!

By KU BUREAU

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார் முத்துக்குமரன்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்று முடிந்திருக்கிறது. இதில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் செளந்தர்யாவும் மூன்றாவது இடம் விஜே விஷாலும் பிடித்தார்கள். டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு பரிசுத்தொகையாக ரூ. 40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்தப் பணத்தை வைத்து என்ன செய்ய இருக்கிறீர்கள் என தொகுப்பாளர் விஜய்சேதுபதி கேட்டதற்கு, ‘27 வருடங்கள் என் பெற்றோர் என்னை கடனில்லாமல் வளர்த்தார்கள். இப்போது வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால், அந்த வீட்டுக்கான தொகையை கொடுக்க வேண்டும்.

எனது நண்பர்கள் அந்தோணி மற்றும் அஸ்வின் ஆகிய இருவருக்கும் மிகக் குறைந்த அளவிலான தொகையை கொடுத்து பிசினஸ் தொடங்க உதவ வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகளுக்கு நா. முத்துக்குமார் எழுதிய ’அணிலாடும் முன்றில்’, ‘வேடிக்கை பார்ப்பவன்’ மற்றும் செல்வேந்திரன் எழுதிய ‘வாசிப்பது எப்படி?’ என்ற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE