அஜித் தான் எனது இன்ஸ்பிரேஷன் - நடிகர் மணிகண்டன் பேட்டி!

By KU BUREAU

நடிகர் அஜித்தான் என்னுடைய இன்ஸ்பிரஷேன் என கோவையில் நடிகர் மணிகண்டன் பேட்டி கொடுத்துள்ளார்.

'குட் நைட்', 'லவ்வர்' படங்களைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் 'குடும்பஸ்தன்' படத்தில் நடித்துள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சன்வி மேகனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் மணிகண்டன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், “தற்போதைய கால கட்டத்தில் நடுத்தர குடும்பஸ்தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக தெரிவித்தார். குடும்பத்தில் துக்கம், இன்பம் அனைத்தும் இருக்கும். சந்தோஷமாக காமெடியாக இருக்கும் படம் தான் குடும்பஸ்தன். நடிகர் அஜித் பல தலைமுறைகளுக்கும் இன்ஸ்பிரேஷன். அவர் என்றுமே தனக்கு விருப்பமான விஷயத்தை கைவிட்டதில்லை. அதற்கான பலன்கள் அவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலக்குகளை அடைய தொடர்ந்து உழைத்தால் ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் உதாரணம்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE