சென்னை: ஜல்லிக்கட்டிலும் சாதியப் பாகுபாட்டைக் கடைபிடிப்பது இழிவான மனநிலை என்று இயக்குநர் ப.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட கருத்து: “ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய நாம்தான், அதிலும் சாதி உள்ளது என்றவுடன் மௌனம் காக்கிறோம்! ஜல்லிக்கட்டைத் தடை செய்தபோது, ஒட்டுமொத்த தமிழகமும் போராடிய தருணத்தில், அது எங்கள் சாதிக்கான விளையாட்டு எனச் சொல்வதற்கு எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை.
» சாயர்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இலங்கையை சேர்ந்தவர் உள்ளிட்ட 2 பேர் கைது
» தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர, வருடாந்திர டோல் பாஸ்: நிதின் கட்கரி தகவல்
ஆனால், இன்று அது எங்களுக்கான விளையாட்டு எனக் கருதி அதிலும் சாதியப் பாகுபாட்டைக் கடைபிடிப்பது இழிவான மனநிலை என்றே சொல்ல வேண்டும். இதைக் கண்டிக்காமல் கள்ள மௌனம் காக்கும் யாவரும் சாதியவாதிகளே!” என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.