பிக்பாஸ், குக் வித் கோமாளிக்காக வேண்டினேன் - நடிகை ஸ்ருதிகா உருக்கம்!

By KU BUREAU

சென்னை: இந்தி பிக்பாஸ் மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிகளில் தான் சிறப்பாக செயல்பட்டதற்கு அண்ணாமலையார் தான் காரணம் என நடிகை ஸ்ருதிகா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடிகையும், பழம் பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியுமான ஸ்ருதிகா இன்று சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சனீஸ்வர பகவான் சன்னதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாமி தரிசனம் செய்த அவர் அண்ணாமலையார் அருளால் பிக்பாஸ் இந்தி மற்றும் குக்கு வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்காற்றினேன் எனத் தெரிவித்தார்.

மேலும், அந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது அண்ணாமலையாரை தரிசித்துவிட்டுதான் சென்றதாகவும் மெய்சிலிர்க்க பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE