பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க்கில் இருந்து முக்கிய போட்டியாளர் வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க்கை பிக்பாஸ் வைத்திருக்கிறார். முந்திய சீசன்களில் எல்லாம் பணப்பெட்டியை எடுத்தால் அந்த நபர் வெளியேறிவிடலாம். ஆனால், இந்த சீசனில் முதல்முறையாக பணப்பெட்டி எடுத்தாலும் போட்டியாளர்கள் போட்டியில் தொடரலாம் என அறிவித்திருக்கிறார் பிக்பாஸ். போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் தரும் நேரத்திற்குள் வீட்டிற்கு வெளியே இருக்கும் பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்துவிட வேண்டும். அப்படி அவர்கள் தவறினால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் பணப்பெட்டி டாஸ்கில் பிக்பாஸ் சொன்ன ரூல்.
இதில் முத்துக்குமரன் ஐம்பதாயிரம் ரூபாயும் ரயான் ரூ. 2 லட்சமும் எடுத்திருக்கிறார்கள். அடுத்து ரூ. 8 லட்சம் வைத்திருந்தபோது அந்தப்பெட்டியை எடுக்க ஜாக்குலின் சென்றிருந்தார். ஆனால், திரும்பி வருவதற்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட அவர் 2 விநாடிகள் அதிகம் எடுத்துக் கொண்டதால் பிக்பாஸ் வீட்டு கதவு மூடப்பட்டு ஜாக்குலின் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்.