நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து: மருத்துவமனையில் அனுமதி!

By KU BUREAU

நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு சென்றிருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை சைஃப் அலிகான். மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் அவரது வீடு அமைந்திருக்கிறது. அவரது வீட்டில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது கொள்ளையடிக்க மர்ம நபர்கள் நுழைந்திருக்கிறார்கள்.

அப்போது மர்ம நபர்களை சைஃப் அலிகான் தாக்க முற்பட்டபோது அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகாலை 3.30 மணியளவில் லீலாவதி மருத்துவமனையில் சைஃப் அலிகான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் ஏற்பட்ட ஆறு காயங்களில் இரண்டு மிகக் கடுமையானவை என மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இது உண்மையிலேயே கொள்ளை சம்பவமா அல்லது கொலை முயற்சியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE