லீக்கான ஆடியோ; நெருக்கடியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்?!

By KU BUREAU

சென்னை: புஸ்ஸி ஆனந்த் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தவெக கட்சியின் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்களை கட்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து நடிகர் விஜய் சந்தித்திருக்கிறார். இந்தத் தேர்வு முடிந்ததும் தொழிற்சங்கம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு செய்தியாளர்களை விஜய் சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்தான ஆடியோ ஒன்று வெளியாகி அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

தவெக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, தவெக நிர்வாகி ஒருவருடன் தொலைபேசியில் பேசும்போது விஜய் சொன்னால் கூட புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை எனவும், விஜயையே ஓரங்கட்டி புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதாகவும் அந்த ஆடியோவில் ஜான் ஆரோக்கியசாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் நிஜத்தையே நிழல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், மாறாக நிஜத்தையே ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றெல்லாம் அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.

இதனால், புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆடியோ கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும் என்பதால், நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் தன்னிலை விளக்கம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE