சென்னை: பிக்பாஸ் தமிழ் வீட்டை விட்டு தர்ஷிகா வெளியேற விஷால்தான் காரணம் என பேச்சு கிளம்பிய நிலையில், அதற்கு தர்ஷிகா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. டிடிஎஃபை ரயான் வென்றிருக்கும் நிலையில் இந்த வாரம் பழைய போட்டியாளர்கள் சிலர் வைல்ட் கார்டாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அதில் சாச்சனாவும் ஒருவர். எட்டாவது சீசனின் போட்டியாளராக இருக்கும் விஷால் முதலில் தர்ஷிகாவுடன் நெருக்கமாக பழகினார். தர்ஷிகா வெளியேறியதும் அன்ஷிதாவுடன் இவரது நட்பு பலமானது.
விஷாலுடனான நட்பால்தான் தர்ஷிகா வெளியேறினார் என்ற பிம்பம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ- எண்ட்ரி கொடுத்திருக்கும் சாச்சனாவும் விஷாலிடம் தர்ஷிகாவிடம் நீ நெருங்கிப் பழகியதுதான் அவர் வெளியேற காரணம் என சொல்ல, இதனால் சோர்வுற்ற விஷாலின் விளையாட்டு தடைபட்டிருக்கிறது. இதுபற்றி தர்ஷிகா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், ‘தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் யாரிடமும் என்னுடைய எவிக்ஷனுக்கு என்ன காரணம் என்பதை கேட்கும்படி சொல்லவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். நான் வெளியேறியதற்கு முழு காரணமும் நான்தான். அதில் வேறு யாரையும் நான் பொறுப்பாக்க விரும்பவில்லை. யாரையும் நான் புண்படுத்தவுமில்லை பயன்படுத்தவும் இல்லை. என்னுடைய உண்மையான உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்தினேன். ஆனால், அது நகைச்சுவையாக்கப்பட்டு என்னை காயப்படுத்தி இருக்கிறது. அதற்கான தெளிவை அந்த இடத்தில் சம்பந்தப்பட்ட நபரிடமே கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறேன். என் சார்பில் யாரும் கேட்க வேண்டாம். இதுவும் கடந்து போகும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
» நயன்தாரா - தனுஷ் ஆவணப்பட வழக்கு தீர்ப்பு எப்போது? இறுதி விசாரணை ஒத்திவைப்பு!
» உதயநிதியை வைத்து படம் இயக்கும் ஆசை உண்டா? - இயக்குநர் கிருத்திகா பதில்!