சென்னை: நடிகர் சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி போடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்காக பாலிவுட் நடிகர் சல்மான்காகானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் கொடுத்து வருகிறது. இதுமட்டுமல்லாது சமீபத்தில் சல்மான்கான் இல்லத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் பரபரப்பை கிளப்பியது அந்த கும்பல். மேலும் சல்மான்கானின் நெருங்கிய நண்பரான பாபா சித்திக்கையும் பிஷ்னோய் கும்பல் கொலை செய்தது.
இந்த சம்பவங்களால் நடிகர் சல்மான்கானுக்கும் அவரது வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சல்மான்கான் குண்டு துளைக்காத காரிலும் அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டு பால்கனியில் நின்றுதான் சல்மான்கான் வழக்கமாக தனது ரசிகர்களை சந்திப்பார். அந்த பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி போடப்பட்டுள்ளது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அதிநவீன கண்காணிப்பு கேமராவும் வீட்டைச் சுற்றியும் இரும்பு முள்வேலியும் போடப்பட்டிருக்கிறது. இதோடு, அவரது வீட்டிற்கு வெளியேயும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பிற்காக இருக்கிறார்கள்.