நயன்தாரா - தனுஷ் ஆவணப்பட வழக்கு தீர்ப்பு எப்போது? இறுதி விசாரணை ஒத்திவைப்பு!

By KU BUREAU

சென்னை: நடிகர்கள் தனுஷ்- நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் டாக்குமெண்ட்ரி அவரது பிறந்தநாளன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தின் பிடிஎஸ் காட்சிகளை தன் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டும் காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் நயன்தாரா மீதும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெட்ஃபிலிக்ஸ் தரப்பு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி இறுதி விசாரணை என்றும், இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE