சென்னை: ”முடிந்து போன விஷயத்தை பற்றி பேசி பயனில்லை” என இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசியிருக்கிறார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
படம் பற்றி இயக்குநர் கிருத்திகா பேசியதாவது, “’காதலிக்க நேரமில்லை’ படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். முன்பு நம் எல்லோருக்கும் காதலிக்க நேரமிருந்தது. இப்போ யாருக்கும் நேரம் இல்லை. அந்த அளவிற்கு பிஸியாக இருக்கிறோம். ’காதலிக்க நேரமில்லை’ என படம் பெயர் வைத்தாலும் காதல் குறித்துதான் பேசியுள்ளோம். காதல் இல்லாமல் எதுவும் இல்லை. அது சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் கொடுக்கும் என்று படத்தில் பேசியுள்ளோம்” என்றார்.
உதயநிதி அரசியலில் பிஸியாக இருப்பது பற்றியும் அவரை வைத்து படம் எடுக்கும் ஆசை இருக்கிறதா என்றும் கிருத்திகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், முடிந்து போன கதையை இப்போது பேசவேண்டாம் என்றும் உதயநிதியை வைத்து படம் இயக்கும் ஆசை இல்லை என்றும் தெரிவித்தார்.
» ஆஸ்கர் விருது போட்டியில் ‘கங்குவா’ உட்பட 7 இந்திய படங்கள்!
» அதிர்ச்சி - கார் ரேஸ் பயிற்சியில் விபத்தில் சிக்கிய அஜித்!