சென்னை: நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்திற்குப் பிறகு நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட படம் ‘குட் பேட் அக்லி’. ஹீரோ- வில்லன் என அஜித்தின் இரட்டை கதாபாத்திரங்கள் கொண்ட போஸ்டர் வித்தியாசமாக ரசிகர்களைக் கவர்ந்தது.
முதலில் இந்தப் படம் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்துடன் சேர்ந்து ‘விடாமுயற்சி’ படமும் பொங்கல் ரிலீஸ் என சொல்லப்பட்டதால் ‘குட் பேட் அக்லி’ பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. இப்போது ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாகிறது எனப் படக்குழு புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.