நயன்தாராவுக்கு அடுத்த சிக்கல் - ஆவணப்பட விவகாரத்தில் மேலும் ஒரு நோட்டீஸ்?

By KU BUREAU

சென்னை: நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி இல்லாமல் படக்காட்சிகளை பயன்படுத்தியதற்காக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற ஆவணப்படம் வெளியானது. இதில் தனுஷின் தயாரிப்பில் வெளியான ‘நானும் ரெளடிதான்’ படத்தின் பிடிஎஸ் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் தரப்பு ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

தன் மீதான தனிப்பட்ட வன்மம் காரணமாகவே தனுஷ் அனுமதி மறுத்திருப்பதாக கடிதம் ஒன்றையும் வெளியிட்டார். இந்த வழக்கில் நயன்தாரா- விக்னேஷ்சிவன் இருவரும் வரும் 8 ஆம் தேதி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து நயன்தாரா அந்த ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தயாரிப்பு நிறுவனம் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

’சந்திரமுகி’ படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது. ஆனால், ஆன்லைன் தொடர்புடைய உரிமை வேறொரு நிறுவனத்திடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE