நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகார்; ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது!

By KU BUREAU

கொச்சி: ஆபாசமாக பதிவிட்டதாக நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரின் பேரில் ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஹனி ரோஸ். சமீபத்தில், தன்னை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக தொழிலதிபர் ஒருவரை பெயர் குறிப்பிடாமல் பேசியவர் இது தொடர்ந்தால் சட்ட ரீதியாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், முகநூல் பக்கத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாக பதிவிட்ட 30 பேர் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொச்சியை சேர்ந்த ஒரு நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த விஷயம் ஹனி ரோஸ் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE