திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!

By KU BUREAU

இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். புத்தாண்டு பிறந்ததை ஒட்டி சிவகார்த்திகேயன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இன்று கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட போது அங்கிருந்த பக்தர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

கடந்த மாதம் ’புஷ்பா 2’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் தாய் மற்றும் மகன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் வருகையின் காரணமாக 8 போலீசார் பாதுகாப்பு பணியில் அவருடன் வந்திருக்கின்றனர் எனவும் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE