நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறைத்தண்டனை உறுதி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

By KU BUREAU

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018ல் பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் நடிகர் எஸ்.வி. சேகர். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தீன் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அவர் கொடுத்திருந்த புகார் அடிப்படையில், எஸ்.வி. சேகர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE