'பிசாசு2’ படம் எப்போது ரிலீஸ்? - அறிவித்தது படக்குழு!

By KU BUREAU

சென்னை: இயக்குநர் மிஷ்கினின் ‘பிசாசு2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி- ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு2’. ஆண்ட்ரியாவை வைத்து வித்தியாசமாக வெளியான படத்தின் போஸ்டர்கள் எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டே இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியானது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தும் இரண்டு ஆண்டுகளாக படம் வெளியாகாமல் இருந்தது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சினைகளே பட வெளியீட்டின் தாமதத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது. இன்று புத்தாண்டு தினத்தை ஒட்டி பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. ‘பிசாசு2’ திரைப்படம் இந்த வரும் மார்ச் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE