பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது ‘விடாமுயற்சி’: அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

By ச.ஆனந்த பிரியா

பொங்கல் விடுமுறைக்கு வெளியாவதாக அறிவிக்கப்படிருந்த நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து ‘சுவதீகா’ என்ற முதல் சிங்கிளும் வெளியானது. படம் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால், இப்போது அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி புத்தாண்டன்று பெரும் ஏமாற்றம் கொடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE