'பாட்ஷா’ ஸ்டைலில் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி புத்தாண்டு வாழ்த்து!

By KU BUREAU

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார்.

புதுவருடம் 2025 பிறந்ததை அடுத்து பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்' என அவர் நடித்த ‘பாட்ஷா’ படத்தின் பிரபலமான பன்ச் வசனத்துடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

புத்தாண்டு தினமான இன்று அவரிடம் நேரில் வாழ்த்து பெறுவதற்காக அதிகாலை முதலே ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அவர்களுக்கும் நேரில் வந்து தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE