நடிகர் சூரியின் உணவகத்திற்கு திடீர் சிக்கல்: ஆட்சியரிடம் புகார்

By KU BUREAU

நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தினை மூடச் சொல்லி புகார் எழுந்துள்ளது.

நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அதில் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. அங்கு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டிக்கான பகுதிக்கு அருகில் காய்கறி வெட்டுதல், பாக்கெட் போடுதல் போன்ற விஷயங்களை செய்து ஆக்கிரமித்துள்ளனர்.

அங்கு கரப்பான் பூச்சி, எலி போன்றவை இருப்பதால் அந்த இடத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த உணவு தான் அங்கிருக்கும் பொதுமக்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் செல்வதால் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அம்மன் உணவகத்தை மூடாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சூரியின் அம்மன் உணவகம் சார்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தனிநபரின் தூண்டுதல் பேரிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவுமே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE