சென்னை: அனுமதியின்றி பொதுமக்களுக்கு தவெக கட்சியின் துண்டு பிரச்சாரம் விநியோகம் செய்ததற்காக சென்னை டி. நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
சென்னை, அண்ணாபல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் இன்று தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தார். மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தனக்கு சொல்ல முடியாத துயரத்தைக் கொடுத்ததாகவும் இன்று காலை தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்தக் கையெழுத்து அறிக்கையை சென்னை, அண்ணாநகரில் உள்ள தனியார் மாலின் முன்பு நின்று பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர் தவெக பெண் நிர்வாகிகள். இதனால், புஸ்ஸி ஆனந்த் போலவே அவர்களையும் காவல்துறையினர் அவர்களை அதிரடியாகக் கைது செய்திருக்கின்றனர்.
’நாங்கள் மறியல் செய்யவில்லை, பொதுமக்களுக்கு இடையூறு செய்யவில்லை. நோட்டீஸ் கொடுத்ததற்கு எதற்கு கைது?’ என தவெக பெண் நிர்வாகிகள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சென்னை மட்டுமல்லாது தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுருக்கு. விஜய், ஆளுநர் சந்திப்பு முடிந்ததும் நடந்திருக்கும் இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
» தமிழக ஆளுநரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்!
» ’வணங்கான்’ சூர்யாவுடன் மோதல்? உண்மையை உடைத்த இயக்குநர் பாலா!