சென்னை: நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘வணங்கான்’ பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா என்ற பேச்சுக்கு படக்குழு பதிலளித்துள்ளது.
பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. பொங்கலுக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’, இயக்குநர் ஷங்கர்- ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படங்களும் வெளியாகிறது. இரண்டு பெரிய படங்கள் வெளியாவதால் ‘வணங்கான்’ ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பட ரிலீஸ் தள்ளிப் போகவில்லை என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 10 பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
» தமிழக ஆளுநரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்!
» ’வணங்கான்’ சூர்யாவுடன் மோதல்? உண்மையை உடைத்த இயக்குநர் பாலா!