தமிழக ஆளுநரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்!

By KU BUREAU

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

சென்னை, அண்ணாபல்கலக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகவும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் இன்று மதியம் ஒரு மணியளவில் ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசி இருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெக கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆக இருக்கும் நிலையில், ஆளுநரை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு தொடர்பாக விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை கேட்ட ஆளுநர் அவர்கள் அவற்றை பரிசீலிப்பதாக கூறினார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE