பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமை: தவெக தலைவர் விஜய் உருக்கம்!

By KU BUREAU

பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளால் தான் சொல்ல முடியாத துயர் அடைந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி பிரியாணி குணசேகரனுக்கு கடுமையான எதிர்ப்பை பலரும் பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அன்புத் தங்கைகளே! தமிழகத்தில் கல்வி வளாகம் முதல் கொண்டு, ஒவ்வொரு நாளும் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அணைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்டைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம்.

எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அரணாகவும். எனவே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE