அதிரடி கிளப்பும் ‘சிக்கந்தர்’ டீசர்: சல்மான்கான் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியீடு!

By KU BUREAU

சென்னை: நடிகர் சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் சல்மான்கான் இன்று தனது 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கண்ணாடி அறைக்குள் ஆயுதம் ஏந்திய சிலைகள் இருக்க அவற்றுக்குள் தனியாளாக கையில் ஆயுதம் ஏதும் இல்லாமல் நுழைகிறார் சல்மான்கான். திடீரென அந்த சிலைகள் அவரைத் தாக்கத் துவங்க, பன்ச் வசனம் பேசிக் கொண்டே அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். சல்மான் கான் ரசிகர்களை திருப்திப் படுத்தும் வகையில் பில்டப்புடன் கூடிய ஆக்‌ஷன் காட்சிகளோடு முடிகிறது இந்த டீசர். புதிதாக எந்த விஷயமும் இல்லை, வழக்கமான ஆக்‌ஷன் பில்டப்தான் எனவும் படத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கலவையான விமர்சனங்கள் இந்த டீசருக்கு கிடைத்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE