விஜயகாந்த் முதலாமாண்டு நினைவுதினம்: விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்தது தேமுதிக!

By KU BUREAU

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவுதின விழாவிற்கு நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் காலமானார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் நேரில் இரங்கல் தெரிவித்தனர். குறிப்பாக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது பெயர் சொல்லும் வகையில் தினமும் தேமுதிக அலுவலகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. நாளை விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட இருக்கும் நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் துணைச் செயலாளர் சதீஷ் , கழகத் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜயை நேரில் சந்தித்து ’முதலாம் ஆண்டு குருபூஜை’யில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE