மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று பெங்களூர் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மன்மோகன் சிங் மறைவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் ஒரு அற்புதமான மனிதர். நல்ல பொருளாதார வல்லுநர், நிபுணர். அவரது மறைவு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.