களைக்கட்டிய பிக்பாஸ்8 வீடு: இந்த வாரம் யார் எலிமினேஷன்?

By KU BUREAU

பிக்பாஸ் தமிழ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போவது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. எழுபது நாட்களைக் கடந்த நிலையில், இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். போட்டியாளர்களின் பிக்பாஸ் விளையாட்டின் நிறை குறைகளை எடுத்து சொல்வதோடு மற்ற போட்டியாளர்களிடமும் ஜாலியாக உரையாடினர்.

போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து போனதை அடுத்து, போட்டியாளர்களின் நண்பர்களும் இந்த வாரம் வருகின்றனர். அந்த வகையில், அருணின் காதலியும் முந்தின சீசன் போட்டியாளருமான அர்ச்சனா இந்த வாரம் வீட்டிற்குள் வந்தால் சில பஞ்சாயத்து வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இந்த வாரம் ரணகள டாஸ்க் எதுவும் இல்லை என்றாலும் குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அன்ஷிதா வெளியேற இருக்கிறார். ஒருவேளை, இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் என்றால் அன்ஷிதாவுடன் விஜே விஷால் அல்லது ஜெஃப்ரி வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE