’லக்கி பாஸ்கர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இயக்குநர் வெங்கி அட்லூரி கைக்கோர்க்கிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44ஆவது படமாக ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடித்த பின்பு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
இந்தப் படங்களை முடித்து விட்டு, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படப்புகழ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் முதல் என்ஜின் எப்படி உருவானது என்பதைப் பற்றிய கதை என்பதால் ‘760 சிசி’ என படத்தலைப்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
» ‘தெரியக்கூடாது என மறைத்த வரலாறு வெளிவந்துள்ளது’ - ‘விடுதலை 2’ படத்தை சிலாகித்த சீமான்!
» பிரபலங்கள்தான் பொறுப்பு - ’புஷ்பா2’ விவகாரத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி!