சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருட்களை விற்றதாக கல்லூரி மாணவர்கள் 5 பேரை ஜெ.ஜெ. நகர் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலி கானின் மகன் அலிகான் துக்ளக்கை போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.
அவரது ஜாமீன் மனு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
‘போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னிடம் எந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை’ என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.