‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் மரணம்: திரைத்துறை அதிர்ச்சி

By KU BUREAU

சென்னை: கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காரணமானார்.

கார்த்தி நடித்து 2012ம் ஆண்டு வெளியான ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் (47) மாரடைப்பால் காரணமானார். நுங்கம் பாக்கத்தில் தனது ‘கே.எம்.கே -குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாடி மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சங்கர் தயாள் ‘கே.எம்.கே -குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதை மீனாட்சி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்மந்தம், ஷங்கர் தயாள்.என் தயாரிக்கின்றனர். ஜெ.லக்‌ஷ்மண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ‘சாதக பறவைகள்’ சங்கர் இசை அமைக்கிறார். செந்தில், யோகிபாபு, லிசி ஆண்டனி, சரவணன், ராகுல் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.அவரின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE