'இந்தியன்3’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்று எழுந்த வதந்திக்கு இயக்குநர் ஷங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதனை ஒட்டி, ஊடகம் ஒன்றிற்கு இயக்குநர் ஷங்கர் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் இந்தப் படம் குறித்தும் ‘இந்தியன்2’ மற்றும் ‘இந்தியன்3’ பற்றியும் பல விஷயங்களைப் பேசி இருக்கிறார். “அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம் தான் ‘கேம் சேஞ்சர்’. ‘இந்தியன்2’ படத்திற்கு இந்தளவுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்திற்கு நானும் கமல் சாரும் கொடுத்த உழைப்பு பெரியது. படக்குழுவினர் அனைவரின் உழைப்பும் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் சுக்கு நூறாகி விட்டது. இருந்தாலும் பரவாயில்லை. ‘இந்தியன்3’ திரைப்படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
அதே போல, ‘இந்தியன்3’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் பரவி வந்த நிலையில் அதை மறுத்திருக்கும் ஷங்கர் படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என சொல்லி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
» நகைச்சுவை நடிகர் கோதண்டராமன் காலமானார்
» 'அமரன்’ படத்துக்கு இயக்குநர் பாலா தந்த நம்பிக்கை: சிவகார்த்திகேயன் பேச்சு!