நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘புஷ்பா2’ திரைப்படம் இந்த மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்திய படமாக வெளியான இது ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ’புஷ்பா2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தானத் தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 9 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தத் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
படத்தின் ப்ரீமியர் ஷோ கடந்த 4 ஆம் தேதி நடந்தது. இதற்காக, அல்லு அர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு சென்றார். இதனால், அளவுக்கதிகமான கூட்ட நெரிசலால் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு அன்று மாலையே இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.