'புஷ்பா2’ படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் கவலைக்கிடமாக உள்ளான் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‘புஷ்பா2’ படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் ஒளிபரப்பானது. படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் உட்பட படக்குழுவினர் அந்தத் திரையரங்கிற்கு வந்ததால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். ரேவதியின் 9 வயது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரேவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்பு அன்று மாலையே ஜாமீனில் வெளியானார். ரேவதியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்த அல்லு அர்ஜூன் சிறுவனின் மருத்துவ செலவையும் ஏற்பதாக சொன்னது குறிப்பிடத்தக்கது.