ஆஸ்கர் ரேஸில் இருந்து ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் விலகி இருக்கிறது.
அடுத்த வருடம் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் பரிந்துரைக்கு வந்த 29 படங்களைப் பார்த்த பின்பு, ’லாபட்டா லேடீஸ்’ படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு அனுப்பியது.
அதன்படி, ஆஸ்கர் 2025 ஆம் வருடத்திற்கான தகுதியான படங்களின் பட்டியலை அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் வெளியிட்டது. இதில் ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. இருந்தாலும், சர்வதேச இணைத்தயாரிப்பான ஷஹானா கோஸ்வாமியின் ’சந்தோஷ்’ என்ற இந்தி படம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.