ஸ்ரு​தி ஹாசன் விலகிய படத்​தில் இணைந்​தார் மிருணாள் தாக்​குர்

By KU BUREAU

தெலுங்கு நடிகர் அதிவி சேஷ் நடித்த ‘மேஜர்’ படம், வரவேற்​பைப் பெற்றதை அடுத்து அவர் நடிக்​கும் பான் இந்தியா படம், ‘டெகா​யிட்: எ லவ் ஸ்டோரி’. இதில் ஸ்ருதி ஹாசன் ஹீரோ​யினாக நடிக்க ஒப்பந்​த​மாகி இருந்​தார். சில காரணங்​களால் திடீரென விலகி​விட்​டார்.

இந்நிலை​யில் அவருக்​குப் பதிலாக மிருணாள் தாக்​குர் அந்தப் படத்​தில் இணைந்​துள்ளார். அதிவி சேஷின் பிறந்த தினத்தை முன்னிட்டு படக்​குழு​வினர் புதிய போஸ்டரை நேற்று வெளி​யிட்​டுள்​ளனர். அதில் அதிவி சேஷுடன் மிருணாள் தாக்​குர் இடம்​பெற்றுள்​ளார். இந்தப் படத்தை சுப்​ரியா யர்ல​கட்டா தயாரிக்க, சுனில் நரங் இணை தயாரிப்பு செய்​துள்ளார்.

இதில் நடிப்பது பற்றி மிருணாள் தாக்​குர் கூறும்​போது, “இதுவரை நான் நடித்​திராத ஒரு கேரக்​டரில் இந்தப் படத்​தில் நடிக்​கிறேன். இந்த கதை பார்​வை​யாளர்​களுக்கு உண்மை​யிலேயே விருந்தாக அமையும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE