பாலிவுட் செல்​கிறார் சந்தோஷ் நாராயணன்?

By KU BUREAU

இசை அமைப்​பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்​களுக்கு இசை அமைத்து வருகிறார். சமீபத்​தில் வெளியான பான் இந்தியா படமான ‘கல்கி 2898 ஏடி’-க்​கும் அவர் இசை அமைத்​திருந்​தார். தற்போது கார்த்திக் சுப்பு​ராஜ் இயக்​கத்​தில் சூர்யா நடிக்​கும் படம், ‘கல்கி 2’ உட்பட சில படங்​களுக்கு இசை அமைத்து வருகிறார்.

இந்நிலை​யில் அவர் இந்தி​யில் அறிமுக​மாகிறார். ஏ.ஆர்​.​முரு​க​தாஸ் இயக்​கத்​தில் சல்மான் கான் நடிக்​கும் ‘சிக்​கந்​தர்’ படத்​தின் படப்​பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உட்பட பலர் நடிக்​கின்​றனர். இந்தப் படத்​தின் பாடல்​களுக்கு பிரீத்தம் இசை அமைக்​கிறார். பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்க இருப்பதாகவும் இதன் மூலம் அவர் இந்​திக்கு செல்​வதாகவும் கூறப்படுகிறது​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE