சென்னை: பிக்பாஸ் தமிழ் வீட்டில் இருந்த போட்டியாளர் ராணவிற்கு ஏற்பட்ட விபத்தால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்றது. மற்றவர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கற்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் டாஸ்க். அந்த வகையில் ஜெஃப்ரியும் பவித்ராவும் இணைந்து தங்களுக்கான கற்களை காப்பாற்ற முயல, ராணவ் அதைத் தடுக்கிறார். அப்போது ராணவை ஜெஃப்ரி தள்ளிவிட அவருக்கு தோள்பட்டையில் அடிபட்டிருக்கிறது. ஆனால், அவர் கண்டெண்ட்டிற்காக நடிக்கிறார் என ஜெஃப்ரியும் செளந்தர்யாவும் கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
இதனையடுத்து, சக போட்டியாளர்கள் ராணவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து செல்கிறார்கள். பிக்பாஸ் டீம் ராணவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இதுபற்றி, பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அறிவிக்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணவ் நலமுடன் இருப்பதாகவும் சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் சொல்கிறார். இதனால், ராணவ் போட்டியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
» நடிகர் விஜய்சேதுபதி மீது காவல்நிலையத்தில் புகார்!
» அரசு கட்டிடத்தை விலை கேட்கவில்லை: இயக்குநர் விக்னேஷ்சிவன் விளக்கம்!