‘பிக்பாஸ்’ விஜய்சேதுபதியை கடுமையாக சாடும் அர்ச்சனா - வீடியோ வெளியிட்டு பரபரப்பு!

By KU BUREAU

சென்னை: பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் விஜய்சேதுபதியை தாக்கி சின்னத்திரை நடிகை அர்ச்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. இவரும் சின்னத்திரை நடிகர் அருணும் காதலித்து வருகிறார்கள். கடந்த பிக்பாஸ் சீசனில் அர்ச்சனா பட்டம் வென்றார். இந்த எட்டாவது சீசனில் நடிகர் அருண் போட்டியாளராகக் கலந்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் அருணுக்கும் தீபக்கிற்கும் நடந்த இடையில் ‘லேபர்’ பிரச்சினை வெடித்தது.

இதில் தீபக் பக்கம் இருந்த நியாயத்தை விஜய்சேதுபதி எடுத்துரைத்தார். ஆனாலும் அருண் விடாமல் தன் பேச்சுதான் சரியானது என அனத்திக் கொண்டே இருந்தார். இதனால், நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட விஜய்சேதுபதியின் அசரீரி குரலாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அருணுக்கு அறிவுரை செய்தார். இது பற்றி அருணின் காதலியும் நடிகையுமான அர்ச்சனா தன்னுடைய சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார்.

அதில், “வீட்டில் ஆட்கள் குறைந்துவிட்டதால் சமையல் வேலைக்கு ஆட்கள் குறைக்கலாம் என அருண் சொன்னார். லேபர் வேலை, ஸ்கில் வேலை என பிரித்து பேசுவதாக சொல்கிறார்கள். வீட்டில் எல்லோரும் சமம் தான். கேம் விளையாடுவது தான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுவது, வேலை செய்வது அல்ல என்பதை தான் அருண் கூறினார். லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் பேசியதை எல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால் அருண் எப்படி நினைக்கிறார் என்பதை மட்டும் ஊதி பெரிதாக்கிவிட்டார்கள். தொகுப்பாளர் விஜய்சேதுபதியும் இதைத்தான் செய்தார். அருணை டேமேஜ் கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்பது போலவே அனைத்தும் நடந்தது” என் பேசியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE