சென்னை: தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார்.
’ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘கபாலி’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்கள், வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவர் பெனடிக் டெயிலர் என்பவருடன் கடந்த 2011 முதலே லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். பின்பு, 2012ல் அவருக்கு திருமணம் முடிந்தது. திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
இப்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே வேலை பார்க்கும் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ‘குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்கு பின்பு வேலைக்கு திரும்பியிருக்கிறேன். மகிழ்ச்சியான தருணம்!’ எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.