நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டிற்கு வந்ததை மனைவி, மகள், மகன் அனைவரும் உணர்வுப்பூர்வமாக வரவேற்று மகிழ்ந்துள்ளனர்.
‘புஷ்பா2’ திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோவின் போது திரையரங்கித்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் அல்லு அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று சிக்கடப்பள்ளி காவல்துறை அல்லு அர்ஜூனை அவரது இல்லத்தில் கைது செய்தனர். பின்பு நேற்று மாலையே அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து வீட்டிற்கு வந்த அல்லு அர்ஜூனை அவரது மனைவி சினேகா, மகன் மற்றும் மகள் கண்கலங்கி, கட்டிப்பிடித்து வரவேற்றனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
» சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்... ரசிகர்கள் ஆரவாரம்
» செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’